ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்டார்.

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பயின்ற அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர் ரோஹித் வெமுலா, கடந்த 2016ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 17ஆம் தேதியன்று விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதற்கு மத்திய அமைச்சர்களான ஸ்மிருதி இராணி மற்றும் பண்டாரு தத்தாத்ரேயாதான் காரணம் என்றும், அவர்களை பதவி நீக்கம் செய்யவேண்டும் எனவும் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர்.

மாணவர் ரோஹித்தின் தற்கொலை விவகாரம், நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், பல பல்கலைக்கழங்களில் ரோஹித் வெமுலாவின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தினர்.

இதனிடையே ஹைதராபாத் பல்கலைக்கழகம் இழப்பீட்டுத் தொகையாக எட்டு லட்சம் ரூபாயை அவரது தாயார் ராதிகா வெமுலாவுக்கு அளிப்பதாக அறிவித்தது. கடந்த இரண்டு வருடங்களாக இழப்பீட்டுத் தொகையை ஏற்க மறுத்த ராதிகா வெமுலா, தற்போது அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இது குறித்து பேசிய ராதிகா வெமுலா, ”இந்தப் பணம் பல்கலைக்கழக துணை வேந்தர் அப்பாராவ் வலியுறுத்தலின் பேரில் வழங்கப்படவில்லை. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய உத்தரவின் பேரில் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்