2 வயது குழந்தையின் கொடூரக் கொலை; மூடிய முகத்துடன் ஜெய்ஶ்ரீராம் கோஷமிட்டபடி கிராமத்தில் சுற்றி வரும் இளைஞர்கள்; வெளியேறும் முஸ்லிம்கள்

0
2128

வெளிமாநிலத்தவர் பலர் அலிகாரில் இருக்கும் தப்பல் கிராமத்தில் தங்கியிருக்கின்றனர். அங்குதான் 2 வயது டிவிங்கிள் சர்மா கொடூரமான முறையில் கொல்லப்பட்டாள். அந்தக் கொலையை  மதக்கலவரமாக மாற்றும் நோக்கத்தோடு அக்கிராமத்தில் குழுமியிருக்கின்றனர் பல வெளியாட்கள் . 

தாத்தாவுடன் ஏற்பட்ட காசு கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட மோதலில் 2 வயதுக் குழந்தையை கொடூரமாகக் கொன்றனர் ஷாஹித், அஸ்லம். அவர்கள் இருவரையும்   போலீஸார் கைது செய்துள்ளனர். 

ஷில்பா , பன்வாரிலால் ஷர்மாவின் ஒரே மகளான டிவிங்கிள் சர்மா கடத்தப்பட்டு, 8 மணிநேரம் சித்திரவதைச் செய்யப்பட்டு மே 30 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். குழந்தையின் அழுகிய உடலை தெருநாய்கள் ஜூன் 2 ஆம் தேதி குப்பைத் தொட்டியில் இருந்து இழுத்து வந்தது . குழந்தையின் எலும்புகள் உடைக்கப்பட்டு, கைகள் தனியாக உருவப்பட்டு, கண்கள் தோண்டப்பட்டு கொலை செய்யப்படிருப்பது தெரியவந்தது.    

குழந்தை கொலைச் செய்யப்பட்ட அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளாத கிராம மக்கள் இந்தக் கொலைக்கு மதச்சாயம் பூச முயல்வதை பார்த்து அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.  தப்பல் கிராமத்தில் 15000 முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.   

தி பிர்ண்ட் தளத்திடம் பேசிய ரிஜ்வான் மதக்கலவரம் ஏற்பட்டுவிடும் என்ற பயத்தில் பல முஸ்லிம் குடும்பங்கள் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள். தி பிரிண்ட் செய்தியாளர் தப்பல் கிராமத்துக்கு சென்ற போது பல முஸ்லிம் குடும்பங்களின் வீடுகள் பூட்டப்பட்டிருப்பதை பார்த்தார். 

குழந்தைக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குபின் ஆயிரக்கணக்கான போலீஸாரும், சிஆர்பிஎஃ வீரர்களும் தப்பல் கிராமத்தில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும்டெல்லி, ஃபரிதாபாத், குருகிராம் நம்பர் பிளேட் கொண்ட வாகனங்கள் தப்பல் கிராமத்துக்கு அடிக்கடி வந்தவாறு இருக்கிறது. 

முகத்தை மூடியபடி பல இளைஞர்கள் தெருவழியாக ஜெய்ஶ்ரீராம் என்று கோஷமிட்டுக் கொண்டே செல்கிறார்கள். சில இடங்களில் சிறுசிறு மோதல்களும் நடந்தவாறு இருக்கிறது இக்கிராமத்தில் . அதனை போலீஸார் தடுத்து வருகின்றனர். 

தி பிர்ண்ட் செய்தியாளர் பார்த்துக் கொண்டிருக்கும்போது தெருவில் விளாயாடிக் கொண்டிருந்த முஸ்லிம் சிறுவர்களை வீட்டுக்கு போகும்படி அறிவுறுத்துகிறார் பிரதான் லலித் . 

‘ நான்தான் டிவிங்கிள் சர்மாவின் உடல் கிடைத்தவுடன் போலீஸுக்கு தகவல் தெரிவித்தேன்  . தற்போது வெளியாட்கள் இங்கு வந்து இந்தப் பிரச்சனையை கலவரமாக மாற்ற முயல்கிறார்கள். இந்தக் குழந்தையின் கொலை என்பது கொடூரமானது . கொலையை இந்து முஸ்லிம் பிரச்சனையாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இந்த இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். நாங்களும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஏன் இந்த இளைஞர்கள் ஜெய்ஶ்ரீராம் என்று வீடுகளின் முன்னால் கத்துகிறார்கள் … அவ்வாறு கத்துவதால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி தெரிந்திருந்தும் ஏன் கத்துகிறார்கள் என்று கேள்வி எழுப்புகிறார் பிரதான் லலித் 

குழந்தை டிவிங்கிளின் தந்தை பன்வாரிலாலும் இந்தப் பிரச்சனை மதக்கலவரமாக மாறிவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார். 

எந் குழந்தை இறந்துவிட்டாள். அந்தக் கொலையை செய்தவர்களுக்கு தகுந்தத் தண்டனைக் கிடைக்க வேண்டும். இந்தக் கிராமத்தில் இருக்கும் அனைத்து முஸ்லிம்களும் அதனால் பாதிப்படையக் கூடாது என்று தி பிர்ண்ட் தளத்திடம் கூறியுள்ளார். பல வருடங்களாக ஒற்றுமையோடு வாழ்ந்து வருகிறோம் என்றும் கூறியுள்ளார்.

பான்வாரி லாலின் உறவினர் அனில் சர்மா இது பற்றி கூறுகையில் கடந்த நான்கு நாட்களாக வெளியாட்கள் இங்கு வந்து எங்களை தூண்டி விடுகிறார்கள். நாங்கள் அசைந்து கொடுக்கவில்லை. இது இந்து முஸ்லிம் பிரச்சனையே அல்ல என்றார். மேலும் தி பிரிண்ட் தளத்தின் செய்தியாளரிடம் வெளியாட்கள் எப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று  நீங்கள் வெளியில் போய் பாருங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.  

டிவிங்கிள் சர்மாவின் வீட்டிற்கு வெளியே பலர் குழுமியிருக்கிறார்கள், அவர்கள் எல்லோரும் வெளியாட்கள் என்று தப்பல் கிராம மக்கள் கூறுகிறார்கள். அவர்களுடைய முழு நோக்கமே பழிவாங்குதல்தான். கத்துவாவில் முஸ்லிம் பக்கர்வால் சமுதாயத்தைச் சேர்ந்த சிறுமியை கொன்றது பற்றீயும் பேசி கொள்கிறார்கள்.  

ஊடகத்தைப் கேமராவுடன்  பார்த்தவுடன் அங்கு குழுமியிருந்தவர்களின் பேச்சு திசை மாறியது .

கூடியிருந்தக் கூட்டத்தில் ஒருவர் இங்கு கூடியிருப்பவர்களில்  ஏன் முஸ்லிம் ஒருவர்கூட இல்லை? அவர்களில் 90 சதவீதத்தினர் இது போன்ற செயல்களில்தான் ஈடுபட்டு வருகிறார்கள் என்று கூற மற்றவர்கள் அதை அமோதித்து ஜெய்ஶ்ரீராம் என்று கோஷமிட்டனர் . 

பல முஸ்லிம்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கிறார்கள் . கொலையாளியான அஸ்லத்தின்  பக்கத்து வீட்டுகார் ஒருவர் தி பிரிண்ட் தளத்திடம் பேசுகையில் டிவிங்கிள் எங்கள் குழந்தை. நாங்கள் பன்வாரிலாலில் வீட்டுக்கு சென்றோம். அவள் காணாமல் போனபோது மசூதியில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தார்கள். அவள் கொலைக்குப் பிறகு இங்கு வந்து கூடியிருக்கும் வெளியாட்கள் எங்களை குறை கூறுகிறார்கள். எங்கள் குழந்தைகள் அங்கு போனபோது அவர்களை விரட்டியடித்தார்கள் அதனால் பயத்தினால் யாரும் அங்கு போகவில்லை. எந்தக் கலவ்ரமும் நடந்துவிடக்கூடாது என்றார்.    

theprint.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here