பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1 ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுவையில் தொடங்கி நடந்து வந்தது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தின் படி இந்த தேர்வு நடத்தப்பட்டது.

பிளஸ் 2 தேர்வை 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ – மாணவிகள் எழுதினார்கள். 2941 தேர்வு மையங்களில் பிளஸ் 2 தேர்வு நடந்தது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்றுடன்(செவ்வாய்க்கிழமை) முடிவடைந்ததையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 30 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த பணி ஏப்ரல் 11 ஆம் தேதி முடிவடைகிறது. அதன்பிறகு ஏப்ரல் 19 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here