2 பேருக்கு பன்றிக்காய்ச்சல்…ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய பெங்களூரு நிறுவனம்

0
236

பெங்களூரில் உள்ள ஆர்.எம்.இசட். இகோ வேர்ல்ட் வளாகத்தில் இயங்கி வரும் எஸ்.ஏ.பி. (SAP) நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களுக்கு H1N1 என்று சொல்லப்படும் பன்றிக்காய்ச்சல் இருப்பதாக தெரியவந்தது.

இதனை தொடர்ந்து தங்கள் ஊழியர்கள் அனைவரையும் வீட்டிலிருந்த படி வேலைசெய்ய உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அந்த சுற்றறிக்கையில் தங்கள் நிறுவனம் செயல்படும் இந்த கட்டிடத்தின் 6 மற்றும் 10 வது தளத்தில் சுகாதார நடவடிக்கை எடுக்கவேண்டியிருப்பதால் ஊழியர்கள் பிப் 20 முதல் பிப் 28 வரை அலுவலகம் வராமல் வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மேலும் சில தகவல்கள் எஸ்.ஏ.பி. நிறுவனம் இந்தியாவில் பெங்களூரு, குருகிராம் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் செயல்படும் தங்களின் அனைத்து அலுவலகங்களிலும் இதுபோன்றதொரு சுகாதார நடவடிக்கை மேற்கொள்வதால் இந்தியாவில் உள்ள தங்கள் ஊழியர்கள் அனைவரையும் வீட்டிலிருந்தபடி பணி செய்ய உத்தரவிட்டிருக்கிறது என்று கூறுகிறது.

மேலும், சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரை அனுகி தகுந்த சிகிச்சையெடுக்க அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளையில், இந்நிறுவனம் இயங்கும் கட்டிடத்தின் மற்ற தளங்களில் செயல்படும் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று தெரியாததால் ஊழியர்கள் குழப்பமடைந்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here