மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் டிஎல்எஸ் முறையில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 ஆட்டம் புளோரிடாவின் லாடர்ஹில் மைதானத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு நடைபெற்றது.  இந்தியா அணி  முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை வென்றது.

இந்நிலையில் நேற்றைய 2ஆவது ஆட்டத்தில் டாஸ் வென்று இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் ஷிகர் தவான் 23 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.  8ஆவது ஓவர் முடிவில் ஸ்கோர்68/1 ஆக இருந்தது.

மறுமுனையில் டி20 ஆட்டங்களில் ரோஹித் சர்மா தனது 17ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். 67ரன்களை எடுத்து(3 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 51பந்துகளில்) வெளியேறினார். பின்னர்களமிறங்கிய ரிஷப் பந்த் 4 ரன்களுக்கும், கேப்டன் விராட் கோலி தலா 1 சிக்ஸர், பவுண்டரியுடன் 28 ரன்களுடன் காட்ரெல் பந்தில் போல்டானார். மணிஷ் பாண்டே 6 ரன்களுடன் காட்ரெல் பந்தில் பெவிலியன் திரும்பினார்

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167ரன்களை எடுத்தது.

க்ருணால் பாண்டியா (2 சிக்ஸர்கள்) 20 ரன்களுடன், ரவீந்திர ஜடேஜா 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தாமஸ்2-27, காட்ரெல் 2-25 விக்கெட்டை வீழ்த்தினர்.

 பின்னர் 168 ரன்கள் எடுதால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத்தீவுகள் அணி தொடக்கத்திலேயே சுனில் நரைன் 4 ரன்களுக்கும்     எவின்லெவிஸ் ரன்ஏதும் எடுக்காமலும் வெளியேறினர்.

பின்னர், நிக்கோலஸ் பூரண்-ரோவ்மேன் பவல் இணை நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. நிக்கோலஸ் 19 ரன்களுடன் க்ருணால் பாண்டியா பந்தில் வெளியேறினார்.
 பவல் அரைசதம்: 3 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 34 பந்துகளில் 54 ரன்கள் விளாசி க்ருணால் பாண்டியா பந்தில் போல்டானார் பவல். 5 ஓவர்களில் வெற்றிக்கு 74 ரன்கள் தேவை என்ற நிலையில் இடையில் வானிலைகாரணமாக ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அப்போது15.3 ஓவரில் 98/4 ரன்களை மட்டுமே பெற்றிருந்தது  மேற்கிந்தியத் தீவுகள் அணி.

மீண்டும் லாடர்ஹில் மைதானம் உள்ள பகுதியில் கடும் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து, பலத்த மழை பெய்ததால் டிஎல்எஸ் முறையில் இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.  இதன் மூலம் 3 ஆட்டங்கள் தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியது.

இந்திய அணி தரப்பில் குருணால் பாண்டியா 2 விக்கெட்களையும், வாசிங்டன் சுந்தர், புவனேஸ்வர் குமார் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.