மோடி எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்கிறார் ஸ்டாலின்.

வாக்குக்கு ரூ. 2 ஆயிரம் வேண்டாம்; ரூ. 2 லட்சம் வேண்டும் என்று கேளுங்கள் என திமுக தலைவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும், இடைத் தேர்தல் நடைபெறவுள்ள 18 தொகுதிகளுக்கும் 18-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்னும் இடைத்தேர்தல் நடக்கவுள்ள 4 தொகுதிகளுக்கு மே மாதம் 19-ம்தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

மக்களவை தேர்தல் பிரசாரம் நாளையுடன் முடியும் நிலையல் அரசியல் கட்சி தலைவர்கள் கொளுத்தும் வெயிலை பார்க்காமல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது-

கடந்த 5 ஆண்டுகளில் சொன்ன வாக்குறுதிகள் எதையும் மோடி நிறைவேற்றவில்லை. இன்றைக்கு இங்கு வந்து தேர்தலுக்காக வாய் சவடால் மட்டும் விட்டுச் செல்கிறார். அதற்கு அடிபணிந்து தமிழகத்தில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

தேர்தல் ஆணையம், போலீஸ் உள்ளிட்டவை உடந்தையாக இருந்து கொண்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது. வாக்குக்கு ரூ. 2 ஆயிரம் கேட்காதீர்கள். ரூ. 2 லட்சம் வேண்டும் என்று கேளுங்கள். ஏனென்றால் அவ்வளவு பணத்தை கொள்ளையடித்து வைத்திருக்கிறார்கள். அது நமது பணம் நம்முடைய வரிப்பணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here