கர்நாடக நீர்த்தேக்கங்களில் இருந்து நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியினை எட்டியது. 2018, ஜூலை 24 ஆம் தேதி நிரம்பிய மேட்டூர் அணை, நடப்பாண்டில் தற்போது இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

கிருஷ்ணராஜசாகர் அணை மீண்டும் நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் 62 ஆயிரத்து 319 கன அடி தண்ணீர் அப்படியே தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதேபோல் கபினி அணையும் நிரம்பி 80 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு 1 . 42 லட்சம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனையடுத்து, மேட்டூர் அணையின் 16 மதகுகளில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டிக்கிறது . அணையிலிருந்து வினாடிக்கு 90000 கன அடி அளவுக்கு நீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது.

தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் காவிரி டெல்டா பகுதிகளான சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்