முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்ட 2ஜி வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.

2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோரை டெல்லி சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பிரஜேஷ் சேத்தி வருகிற நவம்பர் 30-ந் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில், வழக்கை விரைவாக விசாரிக்குமாறு நீதிபதி அனுப் ஜெய்ராம் பம்பானியிடம் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் மனு தாக்கல் செய்தார்.அப்போது எதிர் மனுதாரர்களின் வாதத்தை விரைவில் முடிக்க அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு நீதிபதி பம்பானி, தலைமை நீதிபதியின் உத்தரவுக்கு உட்பட்டு இந்த வழக்கு வரும் 17ஆம் தேதி நீதிபதி பிரஜேஷ் சேத்தி முன்பு வைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here