2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கின் மீதான தீர்ப்பு தேதி அறிவிப்பை டிச.5ஆம் தேதிக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கை டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி விசாரித்து வந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையும் முடிவடைந்து விட்டது. இதனையடுத்து, தீர்ப்பு தேதி செவ்வாய்க்கிழமை (இன்று) அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தீர்ப்பு வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்படிருந்தநிலையில், தீர்ப்பு தேதி தொடர்பான அறிவிப்பு, டிச.5ஆம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்