2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில் டிச.21ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கை டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி விசாரித்து வந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையும் முடிவடைந்து விட்டது. இதனையடுத்து, தீர்ப்பு தேதி செவ்வாய்க்கிழமை (டிச.5) அறிவிக்கப்படும் என கடந்த நவ.7ஆம் தேதி நீதிபதி ஓ.பி.ஷைனி தெரிவித்திருந்தார்.

pat

இதனைத்தொடர்ந்து, வரும் டிச.21ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஓ.பி.ஷைனி செவ்வாய்க்கிழமை (இன்று) அறிவித்தார். அப்போது, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.

இதையும் படியுங்கள்: அன்புசெழியன்… களையை பிடுங்கலாம், களத்தை என்ன செய்வது? – கோலிவுட் வேதாளம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்