சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 9,000 ரன்கள் கடந்து கேப்டன் விராட்கோலி சாதனை படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி வீரர் டி வில்லியர்ஸின் சாதனையை அவர் முறியடித்தார். விராத் கோலி 194 போட்டிகளில் 9,000 ரன்களைக் கடந்துள்ளார். அவரைத் தொடர்ந்து 205 போட்டிகளில் தென் ஆப்ரிக்க வீரர் டி வில்லியர்சும், 228 போட்டிகளில் இந்திய வீரர் கங்குலியும், 235 போட்டிகளில் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரும், 239 போட்டிகளில் மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் பிரையன் லாராவும் 9000 ரன்களைக் கடந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்