பிரதமர் மோடியின் தந்தை பிறப்பு சான்றிதழை காட்டுங்கள் : அனுராக் காஷ்யப்

0
395

பாலிவுட் திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான அனுராக் காஷ்யப் தொடர்ந்து குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

மத்திய அரசு கடந்த 10 ஆம் தேதி குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தியது. இதனை விமர்சித்து அனுராக் காஷ்யப் பிரதமர் மோடியின் அரசியல் அறிவியல் படிப்பின் பட்டத்தையும், தந்தையின் பிறப்பு சான்றிதழையும் கேட்டுள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்ட அவர், ”CAA ஐ நம்மீது அமல்படுத்தும் பிரதமரின் ‘முழு அரசியல் அறிவியல்’ பட்டத்தையும் நான் காண விரும்புகிறேன். முதலில் மோடி கல்வியறிவுள்ளவர் என்பதை நிரூபிக்கவும். பின்னர் பேசுவோம். ”

இன்று CAA செயல்படுத்தப்பட்டுள்ளது. மோடியிடம் முதலில் தனது ஆவணங்களை, ‘முழு அரசியல் அறிவியலில்’ பட்டம் பெற்றதோடு, அவரது தந்தை மற்றும் குடும்பத்தின் பிறப்புச் சான்றிதழையும் முழு நாட்டிற்கும் காட்டச் சொல்லுங்கள். பின்னர் எங்கள் ஆவணங்களைக் கேளுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here