உத்தரப் பிரதேச்த்தில் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வதாகக் கூறிய யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, விவசாயிகளுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலின்போது, விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வதாக பாஜக, தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது, கன்னூஜ் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், பாஜக ஆட்சியமைந்தால் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என பிரதமர் மோடியும் பேசினார்.

yogi

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியும் அமைத்தது. மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் தலைமையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், ஒரு லட்சம் ரூபாய் வரை கடனாகப் பெற்றுள்ள விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால் அம்மாநில சிறு, குறு விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை விவசாயிகளுக்கு அம்மாநில அரசு வழங்கியது. உத்தரப் பிரதேச மாநிலம் எடவா மாவட்டத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

எடவா மாவட்டத்தின் பார்தனா கிராமத்தைச் சேர்ந்த குறு விவசாயியான ஈஸ்வர் தயால் என்பவர், தனது கடன் தொகையில் 19 காசுகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக சான்றிதழ் வழங்கியதாகக் கூறியுள்ளார்.

அதே போன்று மற்றொரு விவசாயியான ராமா நந்த் என்பவருக்கு ஒரு ரூபாய் 79 காசுகளும், முன்னி லால் என்னும் விவசாயிக்கு இரண்டு ரூபாய் கடன் தொகையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சில விவசாயிகளுக்கு பத்து ரூபாய் முதல் 215 ரூபாய் வரையிலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பல விவசாயிகளுக்கு 1000 ரூபாய்க்கும் குறைவான தொகையே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த விவசாயிகள், அந்த சான்றிதழ்களைத் திருப்பிக் கொடுத்துள்ளனர்.

நன்றி: HindustanTimes

இதையும் படியுங்கள்: ”ரோஹிங்யா முஸ்லிம்களை இந்தியா வெளியேற்ற கூடாது”: ஜவாஹிருல்லா

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்