குறைந்த விலையில் சிறந்த அம்சங்களுடன் வெளிவருகிறது “ரெட்மி கே30”

0
422

ஜியோமி நிறுவனதின் ஸ்மார்ட்போனான Redmi K30 வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் ஒரு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்க வடிவமைப்பில் பாப்-அப் செல்பீ கேமராக்களுக்கு பதிலாக பஞ்ச்-ஹோல் டூயல் கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கட் அவுட் வடிவமைப்பு சமீபத்திய பிரீமியம் ஸ்மார்ட்போன் ஆன ஹிவாவே மற்றும் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே காணப்பட்டது.

ரெட்மி கே 30 ஸ்மார்ட்போனின் மையத்தில் உட்பொதிக்கப்பட்ட கேமரா ஒன்று வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஜியோமி ரெட்மி கே 30 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் எந்தவிதமான பிரத்யேக கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை. ஆகவே இதன் கைரேகை சென்சார் ஆனது இன் டிஸ்பிளே சென்சாராகவோ அல்லது ஸ்மார்ட்போனின் பக்கவாட்டிலோ வழங்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி கே 30, ஆண்ட்ராய்டு 10 MIUI 11ல்  இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 396ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 120Hz என்கிற ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.66 இன்ச் அளவிலான் முழு எச்டி+ (1080×2400 பிக்சல்கள்) டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 7 எக்ஸ் SoC ப்ராசஸர் உடன் வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை இது 5G- தொழில் நுட்பத்துடன் வெளியானால் இதில் மீடியா டெக் SoC ப்ராசஸர் -ஐ எதிர்பார்க்கலாம். சீ ரெட்மி கே 30 ஆனது 30W பாஸ்ட் சார்ஜிங்குடன் வரும்.

வடிவமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்களே இருந்தாலும் கூட கேமரா பல மாற்றங்கள் வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ரெட்மி கே 30 ஆனது 64 மெகாபிக்சல் பிரைமரி கேமராவுடன் 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் + 12 மெகாபிக்சல் அல்ட்ராவைடு சென்சார் + 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா எனும் க்வாட் கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. முன்பக்கத்தை பொறுத்தவரை, இதன் டூயல் செல்பீ கேமரா அமைப்பில் 20 மெகாபிக்சல் அளவிலான சென்சார் இருக்கும் என்று தெரிகிறது.

ஜியோமி ரெட்மி கே 30 ஸ்னாப்டிராகன் 730 ஜி ப்ராசஸர் உடன் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம். இந்த ஸ்மார்ட்போனில்  27W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 4,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. விலையைப் பொறுத்தவரை, ஜியோமி ரெட்மி கே 30 ரூ.20,462  விலை நிர்ணயம் செய்யப்படலாம்.

ரெட்மி நிறுவனத்தின் பொது மேலாளரான லு வெய்பிங் இது குறித்துப் பேசிய போது, “ரெட்மி கே30 ஸ்மார்ட்போனில் உலகின் முதல் உயர் தெளிவுத்திறன் கொண்ட இமேஜ் சென்சார் இருக்கும்” எனத் தெரிவித்தார். இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனில் புதிய 60 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 686 இமேஜ் சென்சாரின் பயன்பாடு இருக்கலாம் என்கிற ஊகங்களைத் கிளப்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here