மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) இந்தியப் பொருளாதார வளர்ச்சியைக் குறைத்து மதிப்பிட்டாலும், உலக அளவில் வேகமாக பொருளாதார வளர்ச்சி உள்ள நாடுகளில் இந்தியாவும் இருக்கிறது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த இரு நாட்களுக்கு முன் சர்வதேச நிதியம் வெளியிட்ட பொருளாதார கருத்துக்கணிப்பில் இந்தியாவின் நடப்பு பொருளாதார வளர்ச்சியை 7.3 சதவீதத்திலிருந்து 6.1 சதவீதமாகக் குறைத்துக் கணித்திருந்தது. ஆனால், கடந்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருந்தது. மத்திய அரசு எடுத்துவரும் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளினால், 2020-ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக அதிகரிக்கும் என ஐஎம்எப் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐஎம்எப் மற்றும் உலக வங்கியின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ளார். அப்போது வாஷிங்டனில் இந்திய ஊடகத்தினருக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் ஐஎம்எப் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் குறைத்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், “ஐஎம்எப் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதத்தைக் குறைத்து கணித்து இருப்பது இருக்கட்டும். ஆனால், வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்டிருக்கும் நாடுகளில் இன்னும் இந்தியா இருந்து வருகிறது. சீனாவின் பொருளாதாரத்தோடு இந்தியாவை ஒப்பிடுவதில் எந்தச் சிக்கலும் இல்லை.

ஏனென்றால், ஐஎம்எப் கணிப்பின்படி இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் நடப்பு ஆண்டில் 6.1 சதவீதமாகவே இருக்கிறது. ஐஎம்எப் அமைப்பின் சமீபத்திய கணிப்பில் உலக அளவில் உள்ள நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைக் குறைத்து கணிப்பு வெளியிட்டது. அதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் குறைந்திருக்கிறது.

இருந்தபோதிலும், இந்தியா இன்னும் வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்டுள்ள நாடாகவே இருக்கிறது என்ற முக்கியமான விஷயத்தை மறந்துவிடக்கூடாது. இன்னும் இந்தியாவின் பொருளாதாரம் வளர வேண்டும், இன்னும் வேகமாக வளரவேண்டும் என்பது எனது விருப்பம். அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம் என அவர் தெரிவித்தார்.

நடப்பு நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறையை மத்தியஅரசு கடைப்பிடிக்குமா என்றநிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன்,”நிதிப் பற்றாக்குறை குறித்துஇன்னும் ஆய்வு செய்யவில்லை. இந்தநேரத்தில் அவை என்னைக் கவலைப்பட அனுமதிக்கவில்லை. தொழில்துறையில்இருக்கும் பிரச்சினைகளைக் களைவதற்குத்தான்அதிகமான முக்கியத்துவம் அளித்துவருகிறேன்” எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here