எல்.இ.டி, எல்.சி.டி, டிவிக்களின் விலை இனி குறையும்?

0
331

எல்.இ.டி., எல்.சி.டி. டிவிக்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்கு 5 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதனை மத்திய அரசு இன்று ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் எல்.இ.டி, எல்.சி.டி, டிவிக்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதுதொடர்பாக மத்திய நிதித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் 15.6 இன்ச் மற்றும் அதற்கு அதிகமான அளவு கொண்ட ஓபன் செல்கள் எல்.இ.டி, எல்.சி.டி டிவிக்கள் தயாரிப்பதற்கு பயன்படுகின்றன. இதற்கு விதிக்கப்பட்டு வந்த 5 சதவீத இறக்குமதி வரி ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோன்று ஓபன் செல் டிவி பேனல்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் சிப், பிரின்ட்டட் சர்க்யூட் போர்டு உள்ளிட்டவற்றின் மீதான இறக்குமதி வரியையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. 

கடந்த 2017-ல் டிவி தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் சிலவற்றுக்கு 5 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசு விதித்திருந்தது. இதையடுத்து அவற்றின் விலை கணிசமாக உயர்ந்தது. 

இதற்கு டிவி தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் இந்த வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தன. இந்த நிலையில் மத்திய அரசு இறக்குமதி வரி விதிப்பை ரத்து செய்திருக்கிறது. 

டிவி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஓபன் செல் பேனலின் விலை, டிவியின் மொத்த விலையில் பாதிக்கும் அதிகமாக இருக்கும் .

உள்நாட்டில் டிவி உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தி, உற்பத்தியை அதிகப்படுத்தும் வகையில் இந்த வரிச்சலுகையை அளித்துள்ளது. இதன் தொலைக்காட்சி உற்பத்தி செலவு 3 சதவீதம் வரை குறைவதற்கு வாய்ப்ப்புள்ளது. ஆனால், இந்த இறக்குமதி வரிக்குறைப்பை வாடிக்கையாளர்கள் எத்தனை பேருக்கு நிறுவனங்கள் வழங்கப்போகின்றன எனத் தெரியவில்லை.

இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்  15.5 இன்ச் அளவுக்கு மேல் எல்சிடி, எல்இடி டிவி பேனல்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த இறக்குமதி வரி 5 சதவீதம் ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

பானசோனிக் நிறுவனம், தனது தொலைக்காட்சி விலையில் 4 சதவீதம் வரை விலைக்குறைப்பு செய்து வாடிக்கையாளர்களுக்கு அளிப்போம் எனத் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பேனல்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டதால், இந்தியாவில் நிறுவிய தொலைக்காட்சி நிறுவனத்தை மூடிவிட்டு சாம்ஸங் நிறுவனம் வியட்நாமுக்கு சென்றது. அதுமட்டுமல்லாமல் ஜிஎஸ்டி வரி மற்றும் பேனலின் செலவு ஆகியவற்றால் தொலைக்காட்சிகளின் விலை உயர்ந்து, விற்பனை குறையத் தொடங்கியது. ஆனால், மத்திய அரசின் இந்த அறிவிப்பால் விற்பனை உயர வாய்ப்புள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here