மோட்டோரோலா ஒன் ஆக்‌ஷன் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

புதிய மோட்டோரோலா ஒன் ஆக்‌ஷன் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு பை இயங்கு தளம், 6.3 இன்ச்ஃபுல்ஹெச்.டி. பிளஸ் 21:9 சினிமாவிஷன் எல்.சி.டி. ஸ்கிரீன், எக்சைனோஸ் 9609 பிராசஸர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 12 எம்.பி. பிரைமரிகேமரா, PDAF, 5 எம்.பி. டெப்த்கேமரா, 117 டிகிரிஅல்ட்ராவைடுஆக்‌ஷன்வீடியோகேமரா, மேம்பட்ட வீடியோஸ் டேபிலைசேஷன், 2.0µm குவாட்பிக்சல் தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 12 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமரா வழங்கப்படுகிறது.

மோட்டோரோலா ஒன் ஆக்‌ஷன் ஸ்மார்ட்போனில் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி ஆகியவற்றுடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.மேலும் ஹைப்ரிட் டூயல் சிம்ஸ்லாட் வசதியும் உண்டு.

இதில் கைரேகைசென்சார், 3.5 எம்.எம். ஆடியோஜாக், டால்பிஆடியோ, டூயல் 4ஜிவோல்ட்இ, யு.எஸ்.பி. டைப்-சி, 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி ஆகிய அம்சங்களும் உங்கள் பட்ஜெட் விலையிலேயே வழங்கப்படுகிறது.

மோட்டோரோலா ஒன் ஆக்‌ஷன் ஸ்மார்ட்போன் டெனிம் புளு மற்றும் பியர்ல் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 13,999 எனநிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஆகஸ்ட் 30 ஆம் தேதி மதியம் 12.00 மணிக்கு ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஆரம்பிக்கும்