17 கிமீ நடந்து சென்ற கர்ப்பிணி பெண்; இறந்த குழந்தையை எடுத்துச் செல்ல 2 நாட்கள்; ‘அமைதி காஷ்மீரில்’ மக்கள் படும்பாடு

0
312

ஶ்ரீநகர் லால் டெட் மகப்பேறு மருத்துவமனையில் ஒரு மூலையில் தரையில் உட்கார்ந்திருக்கிறார் அமர்ந்திருக்கிறார் பிலால் மாண்டோ. தனது வலது பக்கத்தில்  இருக்கும் ஒரு அட்டைப்பெட்டியின் பக்கம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.  தனது தலைமுடியை கோதியவாறு, பெருமூச்சு விட்டுக் கொண்டே, அட்டைப்பெட்டியை தனது கைகளால் மெல்ல தடவிக் கொண்டிருக்கிறார். 

எங்களது கனவுகள் அனைத்தும் உடைந்துவிட்டது. இது அல்லாவின் விருப்பம். ஆனால் நாங்கள் இதனை எதிர்ப்பார்க்கவில்லை என்கிறார் பிலால்.

ஆகஸ்டு 5-ஆம் தேதி காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து 370-ஐ நீக்கி ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக்கை யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது  பாஜக அரசு. இதற்காக   தொலைத்தொடர்பு, இண்டெர்நெட்  ஆகியவற்றை துண்டித்தது அரசு. மேலும் 144 தடை உத்தரவும் பிறப்பித்தது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளானது.

அந்த அட்டைப் பெட்டியில் மாண்டோவின் குறைமாதத்தில் பிரசவித்த குழந்தை இருந்தது. அடுத்த மாதம் குழந்தை பிறக்க இருந்தது . ஆனால்  ஆகஸ்டு 8-ஆம் தேதி ரஸியாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வாகனத்துக்காக நாங்கள் 12 மணி நேரம் காத்திருந்தோம். ஆம்புலன்ஸோ வேறு வாகனங்களோ இல்லாததால், நானும் ரஸியாவும் எங்கள் வீட்டில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குப்வாரா மாவட்ட மருத்துவமனைக்கு நடந்தே சென்றோம் என்கிறார் பிலால் மாண்டோ.

மாவட்ட மருத்துவமனையில் போதிய வசதி இல்லாததால், பரிசோதனைக்கு பிறகு ஸ்ரீநகரில் உள்ள லால் டெட் மகப்பேறு மருத்துவமனைக்கு ரஸியாவை அழைத்து செல்ல மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன்படி அங்கு சென்றனர் மாண்டோ , ரஸியா தம்பதியினர் .  மருத்துவமனையில் ரஸியா அனுமதிக்கப்பட்டும் தாமதமாக வந்துவிட்டீர்கள் அதனால் குழந்தை இறந்து விட்டது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

உடைந்து போன தம்பதியினர் தங்களுக்கு நடந்ததை தனது குடும்பத்தாரிடம் எடுத்து சொல்ல முடியாமல், வீட்டிற்கும் செல்ல முடியாமல்  தவிப்பில் மருத்துவமனையிலேயே முடங்கி இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். குடும்பத்தினர் என் குழந்தையை பார்க்க ஆவலாக இருப்பார்கள், அவர்களிடம் என் குழந்தை இறந்து விட்டது என்று அதன் இறந்த உடலைக் காட்ட எனக்கு தெம்பு இல்லை என்று கண்ணீர் மல்க கூறுகிறார் மாண்டோ. 

இந்த தம்பதியனர் தாங்கள் செல்ல வேண்டிய ஆம்புலன்ஸுக்காக காந்த்திருந்தனர். அவர்கள் தாங்கள் வசிக்கும் இடத்துக்குச் செல்லும் ஆம்புலன்ஸ் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரும் என்று மருத்துவமனை  கூறியுள்ளது.   

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகளும், உதவியாளர்களும் வீடு திரும்புவதற்கான ஒரே வழி ஆம்புலன்ஸ் மட்டும்தான். இறந்தவர்களை கொண்டு செல்வதற்கும் இதுதான் வழி. ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் இருந்து நோயாளிகளை ஏற்றிக் கொண்டு வருகின்ற ஆம்புலன்ஸில் அதே மாவட்டத்தைச் சேர்ந்த மற்ற நோயாளிகள் ஏறிக்கொள்ளலாம். இதற்கான அறிவிப்பு மருத்துவமனையில் கொடுக்கப்படும். ஆம்புலன்ஸில் ஏறுவதற்கு நோயாளிகளுக்குள் தள்ளுமுள்ளு ஏற்படும். இடம் கிடைக்காதவர்கள், அடுத்த ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.

தற்போது காஷ்மீரில் நிலவும் பிரச்சனையால் மக்கள் மிகுந்த துயரத்துக்கு உள்ளாகியுள்ள பல சம்பவங்கள் நடக்கிறது .

காஷ்மீர் முழுவதும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு நகர மக்களே தொடர்புகொள்ள முடியாமல் அல்லாடும் நிலையில் காஷ்மீரின் கிராமப்புறங்களில்  நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.

வெள்ளிக்கிழமையிலிருந்து வஜாஹாத் நபியும் அவரது மனைவியும் பெங்களூரில் மருத்துவம் படிக்கும் தனது மகனுடன் பேச  ஶ்ரீநகரில் இருக்கும் துணை கமிஷனர் அலுவலகத்தில் காத்திருக்கின்றனர்.  தங்களுடைய குழந்தைகளுடனும், உறவினர்களுடனும் பேச அரசு நிர்வாகம் துணை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு தொலைபேசி சேவை மையத்தை அமைத்துள்ளது. 

எங்கள் மகனை தொடர்பு கொள்வதற்காக, ஒரு நாள் முழுவதும் காத்திருந்தோம். பேசமுடியவில்லை. மறுநாளும் 4 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்தோம்.  மையத்திற்கருகே சென்றபோது, திடீரென தொலைபேசி ஊழியர் இன்றைய நேரம் முடிந்துவிட்டது; இனி யாரும் பேச அனுமதியில்லை என்றார். நாங்கள் அவரை கெஞ்சினோம். ஆனால் அவரது காதுகளுக்கு எங்களது கோரிக்கை கேட்கவில்லை என்கிறார் வஜாஹாத்தின் மனைவி மைமூனா.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கு தனது மகளிடம் பேசுவதற்காகவும், அதே போல், நுரையீரல் புற்றுநோய்க்காக மும்பையில் சிகிச்சைப் பெற்று வரும் தனது சகோதரனை தொடர்புக் கொள்வதற்காக இளம்பெண் ஒருவரும் காத்திருந்தனர். 

 தொலைபேசி வாயிலாக டெல்லியில் வசிக்கும் தனது தங்கையிடம் பேச 2 மணிநேரம் வரிசையில் காத்திருந்து பேசி முடித்த ஒருவர்  கண்ணீருடன் வந்தார். அவர் கூறுகையில், ” எனது தந்தைக்கு சமீபத்தில் டெல்லியில் இதய அறுவை சிகிச்சை நடந்தது. நான் கடந்த மாத இறுதியில்தான் இங்கு தந்தையை அழைத்துக் கொண்டு வந்தேன். இப்போது அவருக்கு மருந்து இல்லை, என்னிடம் பணம் இல்லை. அதனால்தான் என் தங்கைக்கு நான் பேசி மருந்துக்கு ஏற்பாடு செய்யக் கூறினேன்” எனத் தெரிவித்தார்.

இவர்கள்போலவே, நூற்றுக்கணக்கான பெற்றோர்களும் இளைஞர்களும் தங்களது உறவினர்களிடமும், நண்பர்களிடமும் பேச தவித்துக்கொண்டிருந்தனர்.

ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளி மாநிலத்தில் இருக்கும் தங்களது உறவினர்களைத் தொடர்பு கொள்ள, 10 மாவட்டங்களில் இருக்கும் 80 லட்சம் மக்களுக்காக 300 தொலைத்தொடர்பு சேவை  மையங்களை அமைத்திருப்பதாக அரசு அறிவித்தது. 

thewire.in


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here