புதிய கூகுள் பிக்சல் 4  ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கூகுள் பிக்சல் 4 ஸ்மார்ட்போனின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் தற்போது வெளியாகியிருக்கும் அதிகாரப்பூர்வ டீசர் ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்கள் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி பிக்சல் 4 ஸ்மார்ட்போனின் பின்புறம் சதுரங்க வடிவில் கேமரா பம்ப் காணப்படுகிறது. மேலும் பிக்சல் 4 மாடலில் குறைந்தபட்சம் இரண்டு லென்ஸ்களை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன் எல்.இ.டி. ஃபிளாஷ் யூனிட் ஒன்றும் வழங்கப்படலாம் என தெரிகிறது. எனினும், கேமரா ரெசல்யூஷன் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

வடிவமைப்பை பொருத்தவரை புதிதாக ஆல்-கிளாஸ் பேக் வடிவமைப்பை வழங்கலாம் என தெரிகிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் காணப்படவில்லை. இதனால் பிக்சல் 4 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம்.

புதிய பிக்சல் 4 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டிருக்கும்.

ஸ்மார்ட்போனின் முன்புறம் நாட்ச் வடிவமைப்பு நீக்கப்பட்டு கேலக்ஸி எஸ்10 பிளஸ் போன்று பன்ச் ஹோல் கேமரா வழங்கலாம் என்றும் முன்புறமும் இரட்டை செல்ஃபி கேமராக்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் வெளியாகும் போது ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

எனினும், புதிய பிக்சல் 4 ஸ்மார்ட்போன் ரேம் மற்றும் மெமரி பற்றிய எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. அதேபோல்புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் வெளியீட்டு தேதி பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here