உத்திரபிரதேச மாநிலத்தின் அஹமது நகரில் 16-வயது இளம்பெண் ஒருவரை ₹50000-க்கு விற்க முயன்ற 8 நபர் கொண்ட குழுவை காவல்துறயினர் கைது செய்துள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலம் அஹமதுநகர் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு ஏலத்திற்காக ஆண்கள் கூட்டம்  காத்திருக்கிறது. இந்த ஆண்களுக்கு மத்தியில் கண்ணீருடன் அமர்ந்திருந்த இளம்பெண் ஒருவரை ₹50000 ஆரம்ப விலையாய் கொண்டு ஏலம் விடப்பட்டது. இந்த ஏலம் ₹80000 வரை சென்றது.

அப்போது அங்கே வந்த காவல்துறையினர் இளம்பெண்ணை விற்க முயன்ற நபர் உள்பட அவரது சகாக்கள் என மொத்தம் 8 பேரை கைது செய்தது. இதில் இரண்டு பெண்களும் அடக்கம்.இது அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து அஹமது நகர் காவல்துறை அதிகாரி தர்மேந்திர யாதவ் தெரிவிக்கையில்., ஏலப் பொருளாய் அமர வைக்கப்பட்டு இருந்த இளம்பெண்னின் தாயார் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார். இதனையடுத்து அவரது தந்தை இரண்டாம் திருமணம் செய்ய, அவர்களது வாழ்க்கைக்கு இடையூராய் தெரிந்த இளம்பெண்ணை வீட்டைவிட்டு வெளியேற்ற முடிவு செய்துள்ளார் அவரது இரண்டாவது மனைவி.

இதற்காக ஜார்காண்ட் மாநிலம் ரான்சியில் இருந்து உத்திரபிரதேசம் சென்று, அங்குள்ள தரகர்களை சந்தித்து பின்னர் அவர்களது உதவியோடு தனது விற்பனையினை ஆரம்பித்துள்ளார். இதுகுறித்த தகவல் ஊர் பொதுமக்கள் காவல்துறைக்கு தெரிவிக்க, விஷயம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், முறைகேடான ஏல விற்பனையில் ஈடுப்பபட்ட நபர்களை கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட இளம்பெண் அரசாங்க சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here