ஆப்பிள் நிறுவனம், தனது அனைத்து சாதனங்களுக்கும் அப்டேட்களை வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கு iOS 12.3, ஸ்ட்ரீமிங் சாதனங்களுக்கு tvOS 12.3, ஸ்மார்ட்வாட்ச்களுக்கு watchOS 5.2.1 மற்றும் லேப்டாப்கள் மற்றும் கணினிகளுக்கென macOS 10.14.5 என ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து விதமான சாதனங்களுக்கும் ஒரே நேரத்தில் அப்டேட்களை வெளியிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

மேலும் iOS 12.3 மற்றும் tvOS 12.3 ஆகிய அப்டேட்கள், மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் டிவி செயலியையும் இந்த சாதனங்களுக்கு மறுபடியும் வழங்கியுள்ளது. இந்த ஆப்பிள் டிவி செயலி ஐபோன், ஐபாட், ஆப்பிள் டிவி மற்றும் சில சாம்சங் ஸ்மார்ட் டிவிக்களில் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி, இந்த அப்டேட்களை எப்படி டவுன்லோட் செய்வது?

iOS 12.3 அப்டேட்

iOS 12.3 அப்டேட்-ஐ நீங்கள் பதிவிறக்கம் செய்ய, முதலில் நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் மெனுவிற்குள் சென்று பின் வரும் வழியை பின்பற்ற வேண்டும். Settings > General > Software Update. பின் அளிக்கப்பட்டுள்ள அப்டேட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த அப்டேட்டின் மூலம், உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களில், ஏர்ப்ளே 2வுடன் கூடிய ஆப்பிள் டிவி செயலி, மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் மியூசிக், கார்ப்ளே மட்டும் ஆப்பிள் டிவி ரிமோட் செயலிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வை-பை காலிங் வசதியும் உங்களுக்கு கிடைக்கும். 

 tvOS 12.3 அப்டேட்

இந்த அப்டேட்-ஐ தங்களுடைய, ஆப்பிள் டிவி 4K மற்றும் ஆப்பிள் டிவி HD ஆகிய சாதனங்களில் பெற, முதலில் தொலைக்காட்சிகளை ஆன் செய்து, பின் Settings > System > Software Updates என  உள்ளே சென்ற பின் அங்கு இந்த அப்டேட்-ஐ நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Update Software > Download and Install மூலமாகவும் நீங்கள் இந்த புதிய அப்டேட்-ஐ செய்து கொள்ளலாம். மேலும் மூன்றாம் தலைமுறை ஆப்பிள் டிவிக்களிலும் இதே வழியை பயன்படுத்தி இந்த அப்டேட்-ஐ பெற்றுக்கொள்ளலாம்.

இந்த குறிப்பிட்ட அப்டேட்  மூலம் உங்கள் டிவியில் உள்ள ஆப்பிள் டிவி செயலி மூலம், படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை 4K HDR தரத்தில் பார்க்கலாம்.

watchOS 5.2.1

உங்கள் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்களுக்கான அப்டேட்களை பெற முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஆப்பிள் வாட்ச் செயலியினுள் செல்ல வேண்டும். பின்னர் அந்த செயலியில் General > Software Update என்ற மெனுவிற்குள் சென்று, இந்த புதிய அப்டேட்-ஐ பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த புதிய அப்டேட்டில் உங்கள் இதயம் சீராக துடிக்கவில்லை என்றால் அறிவிப்பு தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

macOS 10.14.5 

இந்த macOS 10.14.5-ஐ, உங்கள் கணினி அல்லது லேப்டாபில் இருந்து நேரடியாக மேக் ஆப் ஸ்டோர்(Mac App Store)-குள் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த macOS அப்டேட்டின் மூலம் உங்கள் சாதனங்களுக்கு சில செக்கியூரிடி அப்டேட்களும் கிடைக்கவுள்ளது. 

இது மட்டுமின்றி HomePod OS 12.3 என்ற அப்டேட் ஒன்றையும் வெளியிட்டுள்ளது . இதை உங்கள் iOS சாதனங்களில் பதிவிறக்கம் செய்ய, iOSசாதனங்களில் உள்ள ஹோம் ஆப்பிற்குள் சென்று, HomeSettings > Software Update > Install என்ற வழியை பயன்படுத்தி அப்டேட் செய்து கொள்ளலாம். லேப்டாப் மற்றும் கணினிகளில், ஹோம் ஆப்பிற்குள் சென்று Edit> Edit Home > Software Update > Install இந்த வழியை பின்பற்றி அப்டேட் செய்துகொள்ளலாம்.

உங்கள் சாதனங்களில் ஏதாவது புதிய அப்டேட் கிடைக்கப்பெற்றால், இந்த ஹோம்பாட் தானாகவே தேடி அப்டேட் செய்துகொள்ளும். 

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here