ஏர்செல் நிறுவனத்துக்கு சுமார் 15,500 கோடி ரூபாய் அளவுக்குக் கடன் இருப்பதால், அதனைத் திருப்பிச் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், நிறுவனத்தைத் திவால் ஆனதாக அறிவிக்கக்கோரி தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் (National Companies Law Tribunal) மனுத் தாக்கல் செய்துள்ளது.

கடந்த வாரம், ஏர்செல் நிறுவனம் நிதி நெருக்கடி காரணமாக அதன் டவர் நிறுவனங்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. டவர் நிறுவனங்களுடன் ஏற்பட்ட இந்தப் பிரச்சினை காரணமாக ஏர்செல் வாடிக்கையாளர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர். மேலும் பல வாடிக்கையாளர்கள் வேறுநிறுவனங்களுக்கு மாறும் நிலையும் ஏற்பட்டது. இதனையடுத்து, ஏர்செல் நிறுவனம் டவர் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் பலன்பாக ஏர்செல் சேவை ஓரளவு சீரடைந்திருந்தது. ஆனால் மீண்டும் சேவையில் பாதிப்பு ஏற்படலாம் என அதன் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கரநாராயணன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்ககோரி தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தை ஏர்செல் நிறுவனம் அணுகியுள்ளது.

கடந்த 1999ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. செல்போன் சேவை சந்தையில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களில் ஏர்செல் நிறுவனமும் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் செல்போன் சேவையில் பல்வேறு நிறுவனங்கள் வரத் தொடங்கியதும் ஏர்செல் நிறுவனம் திணறத் தொடங்கியது. குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் போட்டியிட முடியவில்லை. கடந்த 2016ஆம் ஆண்டு 120 கோடி ரூபாய் லாபத்தை ஈட்டிய இந்நிறுவனம், 2017ஆம் ஆண்டு 120 கோடி ரூபாய் நட்டத்தைச் சந்தித்தது.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here