உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலியால், வாகன நிறுவனங்கள் தங்களின் தயாரிப்பு வாகனங்களுக்கு தள்ளுபடி விலையில் விற்பதாக அறிவித்துள்ளன.

பிஎஸ்-4 என்ற புதிய வாகன தரக்கட்டுப்பாட்டு நெறிமுறைகளை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்துவதால், பிஎஸ்-3 தரநிலை வாகனங்களை விற்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பி.எஸ்.3 தரநிலையில் தயாரிக்கப்பட்ட 96 ஆயிரம் கார்கள், ஆறு லட்சத்தும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் 40 ஆயிரம் மூன்று சக்கர வாகனங்கள் ஆகியவை விற்கப்படாமல் தேங்கின. மேலும் மிகப்பெரிய நட்டத்தைச் சந்திக்கும் சூழலும் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனைச் சற்று சமாளிக்கும் விதமாக, அந்தந்த நிறுவனங்கள், தங்களின் தயாரிப்பு வாகனங்களைத் தள்ளுபடி விலையின் அடிப்படையில் விற்பதாக அறிவித்துள்ளன. அதில், ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் தனது வாகனங்களுக்கு 12 ஆயிரத்து 500 ரூபாயும், பிரீமியம் பைக்குகளுக்கு ஏழாயிரத்து 500 ரூபாயும், ஹோண்டா நிறுவனம் 10,000 ரூபாய் வரையும் தள்ளுபடி செய்து அறிவித்துள்ளன.

இதையும் படியுங்கள் : தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்

இதையும் படியுங்கள் : உலகத்தில் ஒலியால் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்