12 ரூபாய் ப்ரிமீயம் செலுத்தி இரண்டு லட்ச ரூபாய்க்கான ஒரு வருட காப்பீடு கட்டாயமாக எடுத்துக் கொள்ள ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள், காளைகள் முட்டி படுகாயம், எலும்பு முறிவு, சில நேரங்களில் மரணம் கூட ஏற்படுவதும் உண்டு. ஆனால் இவை எஅவற்ரையுமே பொருட்படுத்தாமல் ஆண்டுதோறும் வீரர்கள் அசராமல் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கின்றனர். ஜல்லிக்கட்டின்போது வீரர்கள் மரணித்தால் சில நேரங்களில் அரசு இழப்பீடு வழங்குவதும் உண்டு.

இந்நிலையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் 12 ரூபாய் ப்ரிமீயம் செலுத்தி இரண்டு லட்ச ரூபாய்கான ஒரு வருட காப்பீடு கட்டாயமாக எடுத்துக் கொள்ள மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ், வங்கிக்கு சென்று இந்த காப்பீட்டை எடுத்துக் கொள்ளலாம். காப்பீடு பிரிமீயமாக 12 ருபாய் செலுத்தினால் போதும். மதுரை மாவட்டத்தில், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைத்து மாடுபிடி வீரர்களும் இந்த காப்பீடை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் எந்தவொரு காப்பீடு திட்டத்திலும் தங்களை இணைத்துக் கொண்டதிலை. இந்நிலையில் இந்த காப்பீடு திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மதுரை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்த காப்பீட்டை பெற்றுவிட்டால், தமிழகத்தில் நடைபெறும் எந்தவொரு ஜல்லிக்கட்டு போட்டியிலும் பங்கேற்று துரதிஷ்டவசமாக மரணத்தை சந்திக்க நேர்ந்தால் மாடுபிடி வீரர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் செல்லும். மாடுபிடி வீரர்களும் இந்த காப்பீடு திட்டத்தை வரவேற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here