இந்தி சிம்பா படம் 12 தினங்களில் 200 கோடிகளை கடந்து சாதனை படைத்திருக்கிறது.

இந்த வருடம் வெளியான சல்மான் கானின் ரேஸ் 3 சுமாராகவே போனது. நஷ்டம் இல்லை என்றாலும் பெரிய லாபமும் இல்லை. அமீர்கானின் தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் தோல்வி. அதேபோல் ஷாருக்கானின் ஸீரோ படமும். மூன்று கான்களும் தந்த ஏமாற்றத்திலிருந்து இந்தி சினிமாவை மீட்டிருக்கிறது, வருட இறுதியில் வெளியான சிம்பா.

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்திருந்த சிம்பா டிசம்பர் 28 வெளியானது. இப்படம் 12 தினங்களில் 200 கோடிகளை இந்தியாவில் கடந்துள்ளது. சிம்பா கடந்து வந்த பாதை…

50 கோடிகள் – 3 தினங்கள்
100 கோடிகள் – 5 தினங்கள்
150 கோடிகள் – 7 தினங்கள்
175 கோடிகள் – 10 தினங்கள்
202.83 கோடிகள் – 12 தினங்கள்

மூன்று தினங்களில் 50 கோடியை கடந்த படம் 100 கோடியிலிருந்து 150 கோடிக்குவர – அதாவது ஐம்பது கோடிகளை தாண்ட இரு தினங்களே எடுத்துக் கொண்டது. அதேபோல் 5 தினங்களில் 100 கோடிகள். அடுத்த 100 கோடி 7 தினங்களில். இந்த புள்ளி விவரம் சிம்பாவின் வசூல் சரியாமல் அப்படியே இருப்பதை காட்டுகிறது.

இந்த வருடம் வெளியான இந்திப் படங்களில் பத்மாவத், சஞ்சு இரண்டும் இந்தியாவில் 300 கோடிகளை கடந்து வசூலித்தன. மூன்றாவது படமாக சிம்பா இருக்கும் என்கிறார்கள் பாலிவுட்டில்.

சிம்பா தெலுங்கு டெம்பர் படத்தின் ரீமேக். டெம்பரின் தமிழ் ரீமேக்கான அயோக்யா விஷால் நடிப்பில் தயாராகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here