12 ஆண்டுகளில் இல்லாத சரிவு: $30க்கும் கீழே சென்றது கச்சா எண்ணெய் விலை

0
275

கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெயின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 29.93 டாலர் என்ற அளவுக்கு கீழே சென்றது. கடந்த 2003ஆம் ஆண்டுக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலையில் இந்த சரிவுநிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் பேரல் விலை மூன்று சதவிகிதம் வரை சரிவைக் கண்டுள்ளது.

13 ஆண்டுகளாக ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடையை நீக்கியப் பிறகு அந்நாடு கச்சா எண்ணெய் உற்பத்தியை முழு அளவில் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்