ஹானர் நிறுவனம் தனது புதிய மாடலான 9என் போனை இன்று அறிமுகப்படுத்தியது. ஹானர் இந்தியாவின் துணைத் தலைவர் சஞ்சீவ் இதை வெளியிட்டார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போனில், மேம்படுத்தப்பட்ட ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த போன் டூயல் சிம் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கபப்ட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ உடன் 5.85 இன்ச் திரையைக் கொண்டுள்ளது. ஆக்டா கோர் ஹைசிலிக்கான் கிரின் 659 எஸ்ஓசி பிராசஸரை இந்த போன் கொண்டுள்ளது.
இதன் ரேம் மெமரி 4 ஜிபி. பின்புறம் 13 மெகா பிக்ஸல் கேமராவும், முன்புறம் 2 மெகா பிக்ஸல் கேமராவையும் இந்த போன் கொண்டுள்ளது. மூன்று வேரியண்ட்டுகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 3ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி கொண்ட மாடல் 11,999 ரூபாய்க்கும், 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட போன் 13,999 ரூபாய்க்கும், 4 ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட மாடல் 17,999 விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற ஜூலை 31ம் தேதி முதல் இந்த போன் ப்ளிப்கார்ட் இணையதளத்தில் கிடைக்கும். ஜியோ நிறுவனம் அறிமுகச் சலுகையாக பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.

courtesy:ndtv

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here