கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் விதிகளை மீறி 109 ஏக்கரில் கட்டிடங்களை கட்டியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் உலகிலேயே மிகப்பெரிய 112 அடி சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மகாசிவராத்திரியன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு பிரதமர் மோடி நேரில் வருகை தந்து சிலையை திறந்து வைத்தார். இந்த விழாவில் தமிழக முதல்வர் பழனிச்சாமி மற்றும் பாஜக தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். இதற்கிடையே, விதிகளை மீறி ஈஷா யோகா மையம் விளைநிலங்களை ஆக்கிரமித்து கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளதாக பழங்குடியினர் பாதுகாப்பு சங்க தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையும் படியுங்கள் : யானையின் பிளிறல்கள் உங்கள் தியானங்களைக் கலைக்கும்: மு.ஆனந்தன்

இந்த வழக்கின் விசாரணை புதன்கிழமையன்று நடைபெற்றது. அப்போது, ஈஷா யோகா மையம் உரிய அனுமதி பெறாமல் கட்டங்களைக் கட்டிவருவதாக தமிழக அரசு தெரிவித்தது. சிவன் சிலை, மூன்று மண்டபம் அமைக்க ஒரு லட்சம் சதுர அடி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், ஈஷா யோகா மையம் விதிகளை மீறி 109 ஏக்கரில் கட்டிடங்கள் கட்டியுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆதியோகி சிலை அமைக்கப்பட்டதற்கான ஆவணங்களை அரசு கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

இதையும் படியுங்கள் : காட்டை அழிக்கும் ஜக்கி வாசுதேவுக்கு ஒரு வேண்டுகோள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்