11 ஆண்டுகளில் இல்லாத சரிவு: $35க்கும் கீழே சென்றது கச்சா எண்ணெய் விலை

0
361

கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெயின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 34.23 டாலர் என்ற அளவுக்கு கீழே சென்றது. கடந்த 2004ஆம் ஆண்டுக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலையில் இந்த சரிவுநிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு ஈரான், சவுதி அரேபியா இடையே எழுந்துள்ள சிக்கலும் காரணமாகக் கூறப்படுகிறது. மேலும் சீன பங்குச் சந்தையும் வியாழக்கிழமையன்று ஏழு சதவிகிதம் வரை கடும் சரிவைக் கண்டுள்ளது. இந்திய பங்குச் சந்தைகளில் சென்செக்ஸ் 300 புள்ளிகளும், நிஃப்டி 100 புள்ளிகள் வரையிலும் சரிந்துள்ளன.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்