10,000 ஊழியர்களை வேலைநீக்கம் செய்யும் பார்லே நிறுவனம்; ஜிஎஸ்டிதான் காரணம்

0
367

பிரபல பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனமான பார்லே, பொருளாதார நெருக்கடி காரணமாக 10 ஆயிரம் ஊழியர்களை வேலைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. 

ரூ.5 மற்றும் அதற்குக் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் பிஸ்கெட் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் . குறைக்காவிட்டால்  இதன் காரணமாக ஏற்படும் பொருளாதார பின்னடைவை ஈடுகட்ட ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று பார்லே நிறுவனம் கூறியுள்ளது . 

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

முன்பு பிஸ்கெட்டுக்கு வரி கிடையாது. ஆனால், தற்போது விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத ஜிஎஸ்டி வரி என்பது அதிகமானது. 

அதேபோன்று ரஸ்க் உள்ளிட்ட இதர பொருட்களின் மீதும் 5 சதவீதம் வரி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே பிஸ்கெட்களையும் 5 சதவீத வரி வரம்புக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியான வரிமுறையை விதிக்க வேண்டும் 

ஜிஎஸ்டி வரி உயர்வால், பிஸ்கெட்டுகளின் விலையை உயர்த்தவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. 

இதன் காரணமாக தங்கள் பிஸ்கெட்டுகளின் விற்பனை குறைந்துள்ளதாகவும் பார்லே நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரிய நிறுவனங்கள் இதுபோன்ற முடிவை எடுப்பது அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சமீபத்தில் இதேபோன்ற பொருளாதார நெருக்கடியை பிரபல பிஸ்கெட் நிறுவனமான பிரிட்டானியாவும் சந்தித்தது .

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here