சென்னை மாநகர பேருந்துகளில் ஆயிரம் ரூபாய் வரையுள்ள உள்ள பழைய பஸ் பாஸை பிப்ரவரி 15ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பேருந்து கட்டணம், கடந்த 2011ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, சனிக்கிழமை (இன்று) முதல் அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பிற மாவட்டங்களில் இயக்கப்படும் நகர, மாநகர பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ஐந்து ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 19 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் குறைந்தபட்ச கட்டணம் ஐந்து ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 23 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் பாஸ் வைத்திருப்பவர்களின் நிலை கேள்விக்குறியாகி இருந்தது. இந்நிலையில், ஆயிரம் ரூபாய் வரையுள்ள உள்ள பழைய பஸ் பாஸை பிப்ரவரி 15ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: நீங்கள் யாரையாவது சார்ந்து இருப்பவரா? இதைப் பாருங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here