ஆயிரம் ரூபாய் மாத பஸ் பாஸ் தொடரும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பேருந்து கட்டணம், கடந்த 2011ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஜன.21ஆம் தேதி, முதல் அரசு பேருந்து கட்டணத்தைத் தமிழக அரசு உயர்த்தியது. இந்த திடீர் விலை உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, கட்டண உயர்வை சிறிதளவு குறைத்து தமிழக அரசு அறிவித்தது.

vijayabaskar

இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகப் பேருந்துகளில் வழங்கப்படும், ஆயிரம் ரூபாய் மாதாந்திர பாஸ், 1300 ரூபாயாகவும், ஒருநாள் பாஸ் 50 ரூபாயிலிருந்து 80 ரூபாயாகவும் உயரப் போவதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆயிரம் ரூபாய் மாத பஸ் பாஸ் தொடர்ந்து வழங்கப்படும் என்றார்.

இதையும் படியுங்கள்: எழுதப் படிக்க கஷ்டப்படுகிறதா குழந்தை? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்