100 நாளில் 100 திட்டங்கள்: கேரள மக்களுக்க ஓணம் பரிசளித்த பினராயி

Kerala CM PinarayiVijayan announces 100 projects in the state that will be completed in the next 100 days as part of an action plan to boost the socio-economic status of the state.

0
215

கேரளாவில் 100 நாட்களில் 100 திட்டங்கள் முடிக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். இது கேரள அரசின் ஓணம் பரிசு எனவும் தெரிவித்தார்.

முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில் ‘‘மாநிலத்தின் சமூக-பொருளாதார நிலையை உயர்த்துவதற்கான செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக அடுத்த 100 நாட்களில் மாநிலத்தில் 100 திட்டங்கள் நிறைவடையும்.

கேரள மக்களுக்கான அரசின் ஓணம் பரிசுஇதுதான்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஓணம்பண்டிகையை யொட்டி அரசு அறிவித்த நிவாரண கிட், அடுத்த 4 மாதங்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும். ரேஷன் கடைகள் தொடர்ந்து இந்த உணவு கிட்களை விநியோகிக்கும். ஓணம் பருவத்தில்ஏற்கனவே 88 லட்சம் உணவு கிட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

அனைவரையும்சமமாக நடத்தப்பட்ட ஒரு காலம் இருந்தது. கேரளாவில் நாம் மீண்டும் அந்த காலத்தைகொண்டு வர முடியும். இதுபோன்ற மகிழ்ச்சியான நாட்களை மீண்டும் கொண்டு வர நாம்ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும். வட்டி விகிதங்களை தளர்த்த மத்திய அரசிடம்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 100 நாட்களில் 100 திட்டங்கள் முடிக்கப்படும். அது மக்களுக்கு அரசின் ஓணம் பரிசு என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

முக்கிய அறிவிப்புகள்

* சமூகநல ஓய்வூதியம் ரூ.100 அதிகரிக்கப்படும். ஓய்வூதியம் ஒவ்வொரு மாதமும் விநியோகிக்கப்படும்.

* அடுத்த100 நாட்களுக்குள் சுகாதாத்துறையில் போதுமான அளவிலான ஊழியர்கள்பணியமர்த்தப்படுவார்கள்.

* நாள்தோறும்50 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படும்.

* ஆரம்பசுகாதார மையங்கள் மருத்துவமனையின் வசதிகளுடன் குடும்ப சுகாதார மையங்களாகமாற்றப்படும்.

* 100 நாட்களுக்குள் 153 புதிய குடும்ப சுகாதாரநிலையங்கள் நிறுவப்படும்.

* அரசுபள்ளிகளில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும். புதிய கட்டடங்கள் கட்டப்படும். 250 பள்ளி கட்டடத்தின்கட்டுமானம் விரைவில் தொடங்கும். பள்ளிகள் ஹைடெக்காக மாற்றப்படும்.

* 5 லட்சம்மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட வித்யா ஸ்ரீ திட்டம்செயல்படுத்தப்படும்.

* கல்லூரிகளில்150 புதிய படிப்புகள் தொடங்கப்படும். கல்லூரி மற்றும் உயர்நிலைதுறைகளில் 1000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

* வேளாண்மைஅல்லாத துறையில் 15,000 புதிய நிறுவனங்கள் மூலம் 50,000 வேலை வாய்ப்புகள்உருவாக்கப்படும். 5,000 கிராமப்புற சாலைகள் புதுப்பிக்கப்படும்.

* போக்குவரத்துக்காக189 சாலைகள், 21 பாலங்கள் மற்றும் 41 புதிய திட்டங்கள் நவம்பர்மாதத்திற்குள் தொடங்கப்படும்.

* சபரிமலையில்ரூ.23 கோடி மதிப்புள்ள 3 திட்டங்கள் துவங்கப்படும். 1.5 லட்சம் புதிய நீர்இணைப்பு, 15 புதிய காவல் நிலையங்கள் மற்றும் 15 சைபர் ஸ்டேஷன்கள்துவங்கப்படும்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here