விஜய்க்கு ரசிகர்கள் ஏராளம். பட அறிவிப்பு தொடங்கி அவரது புதிய புகைப்படம் வெளியானால் கூட அதை இணையத்தில் ட்ரெண்டாக்கி மகிழ்வது விஜய் ரசிகர்களின் வழக்கம்.

அந்த வகையில் விஜய் ரசிகர்களை இந்த வருடம் வெளியான சர்கார் படம் கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு சென்றது. சர்கார் படம் பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி வசூலில் சாதனை படைத்தது. மேலும் விஜய்யின் 63-வது பட அறிவிப்பும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இந்த நிலையில் இன்றைய இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் ஆப்-களில் ஒன்றான டிக் டாக்கில் நடிகர் விஜய் என்ற ஹேஸ்டேக்கை இதுவரை 100 கோடி பேர் பயன்படுத்தியுள்ளனர்.

தங்களுக்கு பிடித்த ஹீரோ, ஹீரோயின்களின் வசனங்கள், காட்சிகளை டிக் டாக்கில் பதிவிட்டு அதை சமூகவலைதளத்தில் பகிர்ந்து வரும் ரசிகர்கள், தற்போது அந்த ஆப்-ல் நடிகர் விஜய் பெயர் படைத்துள்ள சாதனையையும் பகிர்ந்து வருகின்றனர்.

அதில் முதலிடத்தில் நடிகர் விஜய்யும் , இரண்டாவது இடத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் உள்ளனர். 3-வது இடத்தில் நடிகர் விஜய் சேதுபதி இடம்பெற்றுள்ளார்.