100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை

0
167

 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முலம் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.  கொரோனா மூன்றாவது அலை தொடர்பான அச்சம் காரணமாக  பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன. விரைவில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜனவரி 16 முதல் தடுப்பூசி போடுவது துவங்கிய நிலையில், 9 மாதங்களில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது.தமிழகத்தில் 5 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்தி உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன.

மக்கள் தொகை அடிப்படையில் உத்தராகண்டில் அதிகமாக முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.100 கோடி தடுப்பூசி போடப்பட்டு இருந்தாலும் 21% பேர் மட்டுமே 2 தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.இந்தியாவில் 51% மக்கள் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்திய 2வது நாடு என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.ஏற்கனவே சீனா முதல் நாடாக 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளது.

முன்னதாக சர்வதேச அளவில் இல்லாத அளவாக பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளின்போது இந்தியாவில்  2 கோடியே 50 லட்சத்துக்கு அதிகமான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.  கடந்த ஜூன் மாதத்தில் சீனாவில் ஒரே நாளில் 2.47 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதே உலக சாதனையாக இருந்தது. இதனை இந்தியா முந்தியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here