100 கோடிக்கு மேல் கடன் வாங்கிய 220 பேர்;ரூ1.14 லட்சம் கோடி வாராக்கடனை தள்ளுபடி செய்த SBI; RTI -யில் வெளியான அதிர்ச்சி தகவல்

0
842

எஸ்‌பி‌ஐ வங்கியில் வசூலாகாமல் இருந்த வாராக்கடனான ரூ1.14 லட்சம் கோடியை தள்ளுபடி செய்திருப்பதாக ஆர்‌டி‌ஐ (தகவல் அறியும் உரிமை சட்டம்) மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

 முக்கிய வங்கிகள் கொடுத்த பல்லாயிரக்கணக்கான கோடி கடனை வாராக்கடனாக அறிவித்து அதனை தள்ளுபடி செய்து வரும் புள்ளிவிவரங்கள் வெளியாகி இருக்கிறது.

இந்தாண்டு மார்ச் 31 வரை அதிகபட்சமாக எஸ்‌பி‌ஐ வங்கி வாராக்கடனாக ரூபாய் 76,000 கோடியை தள்ளுபடி செய்து இருப்பதாக  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்ட கேள்விக்கு   பதில் அனுப்பியுள்ளது. CNN-News18  ஆர்.பி.ஐக்கு தொடர்ச்சியாக ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் மனுக்களை அளித்து பெற்றுள்ள தகவல்களை வியாழன்று வெளியிட்டுள்ளது. அதில் மொத்தம் 11 பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் செயல்படாத சொத்துக்கள், மோசமான கடன்கள் மற்றும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள கடன்கள்பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன.

இதில் பாரத ஸ்டேட் வங்கியானது  ரூ. 100 கோடி மற்றும் அதற்கு மேல் கடன் பெற்றுள்ள 220 வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ. 76, 600 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல 500 கோடி மற்றும் அதற்கு மேல் கடன் பெற்றுள்ள 33 வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ. 37, 700 கோடி கடன் பாரத ஸ்டேட் வங்கியால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

எனவே மார்ச் – 31ஆம் தேதி வரையிலான நிதியாண்டுப் பிரிவில், 253 வாடிக்கையாளர்களிடம் இருந்து மொத்தமாக ரூ. 1.14 லட்சம் கோடியாய் மோசமான கடனாகக் கருதி பாரத ஸ்டேட் வாங்கி தள்ளுபடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.    

980 பேர் 100 கோடிக்கு மேல் பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று அவற்றைக் கட்டத் தவறியதால், வாராக்கடனாக அறிவித்து வங்கிகள் தள்ளுபடி செய்திருப்பதாக ரிசர்வ் வங்கி பட்டியலிட்டு இருக்கிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கி, 100 கோடிக்கு மேல் பெற்ற 94 பேரின் கடன்களையும், 500 கோடிக்கு மேல் வாங்கிய 12 பேரின் வாராக்கடன்களையும் தள்ளுபடி செய்துள்ளது.

இதேபோல ஐ‌டி‌பி‌ஐ வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆப் இந்தியா, ஆக்ஸிஸ் வங்கி, ஐ‌சிஐ‌சிஐ வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளும் கோடிக் காணக்கில் வாராக்கடனை தள்ளுபடி செய்திருக்கிறது . 

100 கோடியும் அதற்கு மேலும் கடன் பெற்றவர்கள் விவரம் – பாங்க் ஆஃப் இந்தியாவில் 56 பேர் (வங்கி கணக்கு வைத்திருப்போர்). கூட்டுறவு வங்கியில் 50 பேர் (வங்கி கணக்கு வைத்திருப்போர்), பாங்க் ஆஃப் பரோடாவில் 46 பேர் (வங்கி கணக்கு வைத்திருப்போர்), சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் 45 பேர் (வங்கி கணக்கு வைத்திருப்போர்). 

 தனியார் வங்கிகளில் 100 கோடியும் அதற்கு மேலும் கடன் பெற்றவர்கள் விவரம் –  ஆக்ஸிஸ் வங்கியில் 43 

பேர் (வங்கி கணக்கு வைத்திருப்போர்), ஐசிஐசிஐ வங்கியில் 37 பேர் (வங்கி கணக்கு வைத்திருப்போர்)

https://www.cnbctv18.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here