கட்டுமான துறை மற்றும் ஒற்றை பிராண்ட் சில்லரை வர்த்தகத்தில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டிற்கு (Foreign Direct Investment – FDI) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் புதன்கிழமை (இன்று) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கட்டுமான துறை மற்றும் ஒற்றை பிராண்ட் சில்லரை வர்த்தகத்தில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், ஏர் இந்தியா நிறுவனத்தில் 49 சதவிகிதம் வரை அந்நிய முதலீட்டிற்கும் அனுமதி அளித்துள்ளது. ஒற்றை பிராண்ட் சில்லரை வர்த்தகத்தில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசின் அனுமதி பெறத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்