பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் என்பது இந்தியாவை உடைக்கும் திட்டம் என திரினாமுல் காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.

டெல்லியில், திங்கட்கிழமையன்று பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் மத்திய அரசு அதிரடியாக மாற்றங்களைச் செய்யப்பட்டு, பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து மற்றும் மருந்துத் துறையில் 100 சதவீத நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இது குறித்துப் பேசிய திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் தெரிக் ஓ’பிரையன், பாஜக தலைமையிலான மத்திய அரசின் இந்தக் கொள்கையால் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் இந்திய சந்தைகளில் எதிர்மறையான தாக்கத்தையே உருவாக்கும் என்றார். மேலும் அவர், மோடி தலைமையிலான அரசின் இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் (Make in India) என்பது இந்தியாவை உடைக்கும் திட்டமாக (Breaking India) உள்ளது என குற்றம் சாட்டினார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்