100 வாட் சூப்பர் சார்ஜ் டர்போ வையர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஜியோமி நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்தது. அந்த வகையில் இந்த தொழில்நுட்பம் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் சாதனங்களில் வழங்கப்படும் என ஜியோமி அறிவித்துள்ளது.

சீன சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களின் படி ஜியோமியின் 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் ஜியோமியின் டெவலப்பர்கள் நிகழ்வில் காண்பிக்கப்பட்டதாகவும், இது அடுத்த ஆண்டு வெளியாகும் சாதனங்களில் வழங்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

ஜியோமியின் 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியை வெறும் 17 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும். ஜியோமி தவிர விவோ நிறுவனம் ஏற்கனவே 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. இந்த தொழில்நுட்பம் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியை வெறும் 13 நிமிடங்களில் சார்ஜ் செய்யும்.

அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஜியோமி மற்றும் விவோ நிறுவனங்கள் தங்களின் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை இதுவரை வணிக ரீதியில் வெளியிடவில்லை. ஜியோமி போன்று விவோ நிறுவனமும் தனது 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அடுத்த ஆண்டு வெளியிடலாம்.

இத்துடன் ஜியோமியின் Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் முதல் முறையாக வழங்கப்படும் என கூறப்படுகிறது. எனினும், இதுபற்றி இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. 

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here