10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வு இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளது. 

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அரசு பொதுத்தேர்வுகள் தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-

பிளஸ்2 தேர்வுகள் மார்ச் 2ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24ல் வெளியாகிறது. இதேபோல் பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் மார்ச் 4ஆம் தேதி தொடங்கி மார்ச் 26ஆம் தேதி முடிகிறது. தேர்வு முடிவுகள் மே 14ஆம் தேதி வெளியாகிறது. 

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 17ல் தொடங்கி ஏப்ரல் 9ல் முடிகிறது. தேர்வு முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியாகிறது.

என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here