நாடு முழுவதும் இதுவரை 25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.07 கோடியாக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 1.53 பேர் உயிரிழந்தனர். மேலும் 1.03 கோடி பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 1,73,740 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படு வருகிறது. தொடக்கத்தில் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.

Rajesh Bhushan, Secretary, Ministry Of Health | Tamil News Online | Latest  News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் |  Tamilnadu News -1NEWSNATION
மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன்

இதனிடையே கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பு மருந்துகளை மக்களுக்கு செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் தொற்றிலிருந்து மீள்வோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாட்டில் உள்ள நிலவரம் குறித்து டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; உருமாறிய கொரோனா தற்போது 70 நாடுகளில் பரவி உள்ளது. இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது 165-ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா பாசிட்டிவ் 5.5% என்ற அளவில் குறைந்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சைபெற்றுவருபவர்களில் 67% பேர் கேரளா, மஹாராஸ்டிராவை சேர்ந்தர்வர்கள். நாட்டில் இதுவரை 25 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாட்டில் 6 நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பிற நாடுகளை ஒப்பிடும் போது இது மிகவும் வேகமான நடவடிக்கை ஆகும். அமெரிக்கா 10 நாள், பிரிட்டன் 18, இத்தாலி 19, ஜெர்மனியில் 20 நாளில் 10 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உலகிலேயே முதன்முறையாக 10 லட்சம் பேருக்கு அதி விரைவாக தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி ஆறு நாளில் மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார். மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில், தமிழ்நாடு, டெல்லி, ஜார்க்கண்ட், மாநிலங்கள் தங்கள் செயல்பாட்டை மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here