10 லட்சத்து 1000 ஆண்டுகள்

0
1007

தூக்கி வீசப்படும் வாழைப்பழத்தோல், மக்குவதற்கு 210 நாட்கள் ஆகும். பஞ்சுக் கழிவுகள் மக்குவதற்கு 15 மாதங்கள் வரையும், காகிதம் மக்குவதற்கு 25 மாதங்கள் வரையும், கயிறு மக்குவதற்கு 314 மாதங்கள் வரையும் ஆரஞ்சுத் தோல் மக்குவதற்கு 6 மாதங்கள் வரையும் ஆகும். அதுபோல உல்லன் சாக்ஸ் மக்குவதற்கு 15 ஆண்டுகள் ஆகும். 

தோல் காலணி மக்க 2540 ஆண்டுகளும், நைலான் துணி மக்குவதற்கு 3040 ஆண்டுகளும் தகர கேன் மக்குவதற்கு 50,100 ஆண்டுகளும் அலுமினிய கேன் மக்க 80100 ஆண்டுகளும் நாப்கின் மக்குவதற்கு 500800 ஆண்டுகளும் பிளாஸ்டிக் பைகள் மக்குவதற்கு 10, 01000 ஆண்டுகளும் ஆகின்றன. ஏன் பிளாஸ்டிக் பொருட்கள் வீசுவதை மட்டும் குறை சொல்கிறோம் என்றால் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அளவு மிக அதிகம் என்பதால்தான்.

 சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் ஒரு நாளைக்கு தலா 2,00,000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. இவற்றை மறுசுழற்சி செய்ய முடியாதா? என்ற கேள்வி எழலாம். தற்போது உற்பத்தியாகும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அப்படியானால் சென்னையில் ஒருநாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு இரண்டு லட்சம் கிலோ. இதில் எவ்வளவு மறுசுழற்சி செய்யப்படும் என கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
 

இயற்கையான வாழை இலை போட்டு உணவருந்தி வந்த நம் மக்கள் தற்போது “கம்ப்யூட்டர் வாழை இலை’ என்ற பெயரில் பிளாஸ்டிக் வாழை இலைகளைப் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். இந்த பிளாஸ்டிக் இலையின் மேல் சூடான திட, திரவ உணவுப் பொருட்களை வைக்கும்போது, பிளாஸ்டிக்கானது லேசாக நெகிழ்ந்து இதில் உள்ள நச்சுப்பொருட்கள் உணவுப் பொருட்களோடு கலந்து உண்பவருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.
 ப.திருமலை எழுதிய “இன்றைய பிரச்சனைகளும் தீர்வுகளும்’ என்ற நூலிலிருந்து…

Courtesy: DN


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here