10 மில்லியன்: நன்கொடை வழங்கி கொண்டாடிய சமந்தா

Actor Samantha Akkineni has amassed the 10 million followers mark on Instagram and she would be donating to ten NGOs to celebrate the occasion.

0
213

தமிழ், தெலுங்கில் பிசியான நடிகை சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு ஐதராபாத்திலேயே செட்டிலாகிவிட்டார். சமந்தா சமூக வலைத்தள பக்கங்களில் பிசியாக இருப்பவர்.

இந்த நிலையில் சமந்தாவின் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதை கொண்டாடும் வகையில் 10 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்துள்ளதாக அறிவித்துள்ளார் சமந்தா.

தனது ‘ஓ பேபி’ திரைப்படத்திலிருந்து ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து சமந்தா கூறியிருப்பதாவது:

“ஆஹா,10 மில்லியன். அழகான நடாலி போர்ச்மேன் செய்ததைப் போல நானும், எனது பெரிய10 மில்லியன் குடும்பத்தைக் கவுரவிக்கும் வண்ணம் 10 அற்புதமான தன்னார்வ அமைப்புகளுக்கு நிதி அளித்துள்ளேன். அனைவருக்கு என் அன்பு”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here