கடந்த சில தினங்களுக்கு முன்பு 5 பைசாவுக்கு ½ பிளேட் சிக்கன் பிரியாணி என திண்டுக்கல்லில் அறிவிக்கப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். மேலும், முதலில் வரும் 100 நபர்களுக்கு மட்டுமே பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் ஏராளமானோர் பழைய 5 பைசா நாணயத்துடன் குவிந்தனர்.

இதே போல திண்டுக்கல்லில் உள்ள ஒரு ரெடிமேட் நிறுவனம் 10 பைசா கொண்டு வரும் முதல் 200 நபர்களுக்கு டி-சர்ட் வழங்கப்படும் என அறிவித்தது. இதனையடுத்து இன்று காலை முதல் ஏராளமானோர் 10 பைசா நாணயத்துடன் நீண்ட வரிசையில் நின்றனர். குறுகலான அந்த தெருவில் பொதுமக்கள் அதிக அளவு திரண்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதில், 200 நபர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டது. இருந்த போதும் டோக்கன் இல்லாத நபர்களும் அங்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். பழைய நாணயங்களை சேமித்து வைக்கும் பழக்கம் இருக்க வேண்டும். பழமையை ஒரு போதும் மறக்க கூடாது என்பதை உணர்த்தும் வகையில் இது போன்ற பழைய 10 பைசா நாணயத்தை கொண்டு வருபவர்களுக்கு டி-சர்ட் வழங்கும் அறிவிப்பை வெளியிட்டதாக கடை உரிமையாளர் தெரிவித்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here