10 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா

Pakistan Cricket Board (PCB) have announced that 10 players have tested positive for COVID-19 during a round of tests ahead of the squad assembling for their tour of England.

0
207

பாகிஸ்தான் கிரிக்கெட்அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்நிலையில், ஆகஸ்டு மாதம் தொடங்கவிருக்கும் தொடருக்கு, பாகிஸ்தான் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ள 29 வீரர்களும், மருத்துவ அதிகாரி உள்பட பயிற்சி குழுவினரும் வருகிற 28 ஆம் தேதி லாகூரில் இருந்து சிறப்பு விமானத்தில் லண்டனுக்கு புறப்படுகிறார்கள்.

இங்கிலாந்துக்கு தொடருக்கு கிளம்புவதற்கு முன்பாக தங்களது வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. முதற் கட்டமாக அவரவர் இருப்பிடங்களுக்கே சென்று நேற்று முன்தினம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் முடிவில் ஆல்-ரவுண்டர் முகமதுஹபீஸ், வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ், புதுமுக பேட்ஸ்மேன்19 வயதான ஹைதர் அலி, சுழற்பந்துவீச்சாளர் ஷதப்கான் மற்றும் பஹார்ஜமான், முகமதுரிஸ்வான், ஹாரிஸ்ரவுப், காஷிப்பாட்டி, முகமது ஹஸ்னைன், இம்ரான்கான்ஆகிய10 வீரர்களுக்கு கொரோனாதொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அணியின் உதவியாளர் ஒருவரும் பாதிக்கப்பட்டுஉள்ளார். சோதனைக்கு முன்புவரை இவர்களுக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை. இதையடுத்து இவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்ததும் அவர்கள் அணியுடன் இணைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி கொரோனா தாக்குதலுக்கு உள்ளான நிலையில் மேலும் 10 வீரர்கள் கொரோனாவில் சிக்கி இருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி வாசிம்கான் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து பயணம் திட்டமிட்டபடி தொடரும். டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் பிரதான வீரர்களில் அதிர்ஷ்ட வசமாக விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் தவிர வேறு யாருக்கும் பாதிப்பு இல்லை. அதனால்அவர்கள் அங்கு சென்றதும் உடனடியாக பயிற்சியை தொடங்கமுடியும்’ என்றார்.

இதற்கிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் விளையாட்டு மருத்துவ இயக்குனர் டாக்டர் சோகைல் சலீம் அளித்த பேட்டியில், இங்கிலாந்து சென்ற பிறகு அங்கு எந்த வீரருக்காவது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அந்த வீரர் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார். பின்னர் 2-வது முறையாக அந்த வீரரை சோதிக்கும்போது, கொரோனா இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ வந்தால் அவர் மறுபடியும் அணியுடன் இணைவார். ஆனால்2-வது சோதனையிலும் தொடர்ந்து கொரோனா இருப்பது கண்டறியப்பட்டால் அந்த வீரர் தாயகம் திருப்பி அனுப்பப்படுவார்.’ என்றார்.

தனிமைப்படுத்துதல் மற்றும் பயிற்சிக்காக ஒரு மாதத்துக்கு முன்பே பாகிஸ்தான் அணி அங்கு செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here