10 நிமிடங்களில் 4 குவார்ட்டர் : போட்டியில் வென்றவருக்கு கிடைத்த பரிசு இதுதான்

0
205

உத்தர பிரதேச மாநிலத்தில் மது குடிக்கும் போட்டியில் அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் ரத்த வாந்தி எடுத்து மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

கடந்த வெள்ளிக்கிழமை காலை உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உகான்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திர சிங் (55)  இஸட்நகர் பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மது குடிப்பது தொடர்பாக இருவருக்குமிடையே ஒரு பந்தயம் போடப்பட்டது.

20 நிமிடத்திற்குள் யார் 4 குவாட்டர் பாட்டில்களை குடிக்கிறாரோ அவர்தான் வெற்றியாளர். தோல்வி அடைபவர், இரண்டு பேருக்கான 8 குவார்டர் பாட்டில்களுக்கான விலையை கொடுக்க வேண்டும்.

போட்டி ஆரம்பித்த பத்து நிமிடத்திலேயே ராஜேந்திர சிங் நான்கு குவாட்டர் பாட்டில்களை, தண்ணீர் உள்ளிட்ட எந்த பானமும் கலக்காமல் ராவாக குடித்து முடித்து பந்தயத்தில் வென்றார். இந்த உற்சாகத்துடன் தன் வீட்டிற்கு வந்து படுத்த ஒரு மணி நேரத்தில் ரத்த வாந்தி எடுத்து மயங்கினார்.

இதை கண்ட அவரது மகன், தந்தையை காப்பாற்ற ஆம்புலன்சை அழைத்தார். ஆனால் ஆம்புலன்ஸ் அந்த இடத்திற்கு வருவதற்கு முன்னரே ராஜேந்திர சிங் இறந்து விட்டார். இதனையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் அவரது மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here