10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: விளக்கம் பெற மிஸ்டு கால் : பள்ளிக்கல்வித்துறை

0
907

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜுன் 15 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் மிஸ்டு கால் கொடுத்து விளக்கங்களை பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது வரும் ஜுன் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தேர்வுகளை தள்ளிவைக்குமாறு கோரிக்கைகள் எழுந்து வரும் இந்த சூழலில் ஊரடங்கு மற்றும் கொரோனா அச்சம் காரணமாக 10 ஆம் மாணவர்களுக்கு தேவையான மனநல ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களை போக்குவதற்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒரு முயற்சியானது இதுமேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

9266617888 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து 10 ஆம் வகுப்பு தேர்வு குறித்த விளக்கம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here