10 ஆண்டு மக்களுக்கு எதுவும் செய்யாத அதிமுக 100 நாட்களில் எங்களை குறை சொல்கிறார்கள் ; பத்திரப்பதிவுத் துறையில் நடைபெற்ற ஊழல் குறித்து விவாதிக்கலாமா? – சவால் விடும் அமைச்சர்

0
259

பத்திரப்பதிவுத் துறையில் நடைபெற்ற ஊழல் குறித்து விவாதிக்கலாமா என அதிமுகவுக்கு அமைச்சர் மூர்த்தி சவால் விடுத்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றிய திமுக கடந்த மே மாதம் 7ம் தேதி ஆட்சி அமைத்தது. முதல்வர் இருக்கையில் அமர்ந்ததில் இருந்து பம்பரமாக சுழற்றி மக்களுக்காக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திமுக அமைச்சர்களும் அந்தந்த துறைகளும் தனி கவனம் செலுத்தி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற தவறுகளை மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார்கள்.

அண்மையில் சுகாதாரத்துறயில் ஊழல் நடைபெற்றிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்பு செய்யப்படவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றஞ்சாட்டியிருந்தார். இவ்வாறு அதிமுக அரசின் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், பத்திரப்பதிவு துறையில் ஊழல் நடைபெற்றிருப்பதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, 10 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்து மக்களுக்கு அதிமுக எதுவும் செய்யவில்லை. 100 நாட்களில் எங்களை குறை சொல்கிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும், பத்திரப்பதிவு துறையில் நடைபெற்ற ஊழல் பற்றி விவாதிக்க தயாரா என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு சவால் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here