நேபாள பிரதமர் காட்கா பிரசாத் ஒளி(64), தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், தனக்கு வெற்றி கிடைக்காது என்பதற்காக அவர் தனது பதவியை முன்கூட்டியே ராஜினாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக நேபாளி காங்கிரஸ் மற்றும் சிபிஎன் மாவோயிஸ்ட் கட்சிகள் கேபி ஒளிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தன. மேலும், வாக்குறுதிகளை நிறைவேற்ற கேபி ஒளி, தவறி விட்டதாக அக்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.

கடந்த 10 ஆண்டுகளில், நேபாளத்தின் எட்டாவது பிரதமராக பதவியிலிருந்தவர் கேபி ஒளி என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்