10 ஆண்டுகளாக மின்சாரம் இல்லை: விஜய் மக்கள் மன்றத்தினரின் முயற்சியால் மின் இணைப்பு

0
155

நெல்லை மாவட்டம் சுண்டன் குறிச்சி கிராமத்தில் 10 ஆண்டுகளாக மின்சாரமின்றி தவித்த வீட்டிற்கு விஜய் மக்கள் மன்றத்தினர் மின்வசதி ஏற்பாடு செய்துள்ளனர். 150க்கும் அதிகமான வீடுகள் உள்ள சுண்டன் குறிச்சி கிராமத்தில் புஷ்பம் என்பவர் வீட்டில் மட்டும் மின்வசதி இல்லை. கணவரின்றி, 2 பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் அவரது சிரமத்தை உணர்ந்து விஜய் மக்கள் மன்றத்தினர் அவரது வீட்டிற்கு மின் இணைப்பு கிடைப்பதற்காக வீட்டருகே 2 மின்கம்பங்கள் நட்டு கொடுத்தனர். அதனையடுத்து, மின்வாரியம் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு மின் இணைப்பு கொடுத்துள்ளது.

சுண்டன்குறிச்சி கிராமத்தில் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் ஏழை குடும்பத்தின் நிலை அறிந்து ரசிகர் ஒருவர் தெரிவிக்க, அதனைத் தொடர்ந்து கடந்த 75 நாட்களாக மின் வாரியத்திடம் தகவல் கொடுத்து பணம் கேட்டு அதற்கான பணிகளை செய்து இரண்டு மின் கம்பங்கள் புதிதாக நட்டு ஒயர்களை இழுத்து இந்த வீட்டிற்கு மின் இணைப்பு பெற்று தந்துள்ளனர். சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமாக செலவாகியுள்ளது. வீட்டுக்கு புதிதாக வெள்ளை அடித்துக் கொடுத்தும், வீட்டுக்கு தேவையான பலசரக்கு சாமான்கள் வாங்கிக் கொடுத்தும் குடும்பத்திற்கு மின்சார இணைப்பை பெற்றுக்கொடுத்ததே எங்களுக்கு மகிழ்ச்சி என்கின்றனர் நெல்லை மாவட்ட விஜய் மக்கள் மன்ற இணையதள அணியினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here